தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வெங்கட சமுத்திரம் பெரியார் பெருந் தொண்டர் வி.ஆர். வேங்கன் (வயது 95) வெங்கட சமுத்திரத் திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (15-12-2022) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
வி. ஆர். வேங்கன் அவர்கள் 1970 ஆம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவராகவும், 1990 இல் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றியவர். இறுதி மூச்சு அடங்கும் வரை சுயமரியாதைக்காரராக வாழ்ந்து காட்டியவர்.
2015 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவச்சிலையை நிறுவியுள்ளார். 2015-2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பெரியார் விருதினை அவருக்கு வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு தமிழ்ச்செல்வன், புத்தன் ஆகிய இரு மகன்களில் புத்தன் ஏற்கெனவே இறந்துவிட்டார்.
அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment