புயல்-மழை பாதிப்பை வெற்றிகரமாக கையாண்ட தமிழ்நாடு அரசு பல தரப்பினரும் பாராட்டுகின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

புயல்-மழை பாதிப்பை வெற்றிகரமாக கையாண்ட தமிழ்நாடு அரசு பல தரப்பினரும் பாராட்டுகின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, டிச. 12  சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை செய லாளர் கோவி அய்யாராசு இல்ல திருமண விழா நேற்று (11.12.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. 

மணமக்கள் திலீபன் ராஜ்-ஐஸ்வர்யா திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து பேசிய தாவது:- இன்றைக்கு நான் பொறுப் பேற்று பணியாற்றி கொண்டிருக்கிற இந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆட்சியை பற்றி பலர் பேசும் போது இங்கே குறிப்பிட்டு சொன் னார்கள். 2, 3 நாள் பெய்த மழையை பற்றி குறிப்பிட்டார்கள். மழை-புயல் அதை எப்படி எல்லாம் சமாளித்தோம். அதில் என்ன பெயர் நமக்கு கிடைத்தது. பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத் தான் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

நாம் ஆட்சிக்கு வந்த போது என்ன நிலைமை? ஒரு பெரிய கொடிய தொற்று நோய் கரோனா. அதில் இருந்து மீண் டோம். அன்றைக்கு முதல்-அமைச்சரில் இருந்து எல்லா அமைச்சர்களும் 'ஹெல்த் மினிஸ்டராக' மாறினோம். அதனால் தான் கட்டுப்படுத்த முடிந்தது. அது முடிவதற்கு முன்னாலே வெள்ளம் வந்துவிட்டது. பெரிய மழை வந்தது. அதையும் சமாளித்தோம். வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால் இதைத் தான் கலைஞர் சொல்லி விட்டு சென் றார். உழைப்பு, உழைப்பு உழைப்புதான் நமது மூலதனமாக இருக்கணும். அதை நான் ஸ்டாலினிடம் பார்க்கிறேன் என்று சொன்னார்.

அந்த உழைப்பை பயன்படுத்தி தான் நான் மட்டுமல்ல அமைச்சர்கள் மட்டுமல்ல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல உள்ளாட்சி பிரதிநிதிகள் நம்முடைய திமுக தோழர்கள் இந்த இயக்கம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று குருதி சிந்தி, உயிரை அர்ப்பணித்து போராடி கொண்டிருக்கிற கலைஞரின் உயிரினும் உயிரான அன்பு உடன் பிறப்புகளாக விளங்கி கொண்டிருக் கிறவர்கள். அவர்களும் இதில் இணைந்து கொண்டு பணியாற்றிய காரணத்தால் தான் இன்று கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது. நேற்றில் இருந்து போனை வைக்கவே முடியல. எல்லோரும் போன் பண்ணி ரொம்ப சிறப்பா பண்ணிட்டீங்க என்று பாராட்டினார்கள். எல்லா இடத்தில் இருந்தும் பாராட்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது - _ நான் கூட பேசும் போது சொன்னேன். 

தமிழ்நாடு நம்பர் -1

நம்பர்-1 முதல்-அமைச்சர் என்று பாராட்டினார்கள். நம்பர்-1 முதல்-அமைச்சர் என்பதில் எனக்கு அதிகமாக பெருமையோ, பாராட்டோ நினைக் கலை. என்றைக்கு நம்பர்-1 தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குதான் எனக்கு பெருமை. அதையும் நிறை வேற்றுவான் இந்த ஸ்டாலின் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள் கிறேன். ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் இல்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதனால் அதையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். மணமக்களை வாழ்த்துகிறபோது அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய முறை. இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம், மாநில அரசாங்கம் குடும்ப கட்டுப்பாட்டுக்காக எவ்வளவோ பல கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியும். முன்பெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு எந்த நிலையில் இருந்தது என்றால், நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னார்கள். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர் நமக்கு இருவர் என மாறியது. 

இப்போது என்னவென்றால் நாம் இருவர் நமக்கு ஒருவர். நாளைக்கு இதுவும் மாறலாம். நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை? அப்படி கேட்கிற நிலை வந்தாலும் வரலாம். காரணம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது. ஆகவே நீங்கள் பெற்றெடுக்கிற குழந்தை அளவோடு பெற்றாலும் அந்த குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். 

ஏனென்றால் தமிழுக்கு தலைவர் கலைஞர் எப்படி எல்லாம் சிறப்பு சேர்த்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இன்று இந்த திருமணம் சுயமரியாதை உணர்வோடு நடக்கிறது என்றால் இது வெறும் சுயமரியாதை, சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல தமிழ் திருமணம். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment