காவல்துறை கட்டுப்பாட்டில் சபரிமலை கடவுளே காவல்துறையின் கட்டுப்பாட்டில்தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

காவல்துறை கட்டுப்பாட்டில் சபரிமலை கடவுளே காவல்துறையின் கட்டுப்பாட்டில்தானா?

திருவனந்தபுரம் டிச. 6- பாபர் மசூதி இடிப்பு தினமான 06.12.2022 அன்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால் சபரிமலை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.  

கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தி கோவிலை சுற்றி கண் காணிப்புப் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சபரிமலை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு பி.விஷ்ணு ராஜ் ஆய்வு செய்தார். அவர் சன்னி தானம், பம்பை மற்றும் மரக்கூட்டம் ஆகிய பகு திகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவ ரின் உத்தரவின் பேரில் சன்னிதானம் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி ஹரீந்திர நாயிக் தலைமையில் கமாண்டோ படை, கேரள காவல்துறை, அதி விரைவு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனம் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் அடங் கிய படையினர் சன்னி தானம் நடை பந்தல் முதல் மரக்கூட்டம் வரை அணிவகுப்பு நடத் தினர். 

அதே சமயம் சபரி மலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின் னரே மலையேற அனும திக்கப்படுகின்றனர். பம்பை கணபதி கோவில் முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் வெடிகுண்டை கண்டறி யும் (மெட்டல் டிடெக் டர்) கருவி அமைத்து பக் தர்கள் சோதனை நடத் தப்பட்டு, சன்னிதானத் துக்கு அனுமதிக்கப்படு கிறார்கள். 

பம்பை முதல் சன்னி தானம் வரை கண் காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள் ளன. அதே போல் வான் வழியாக கண்காணிக்க இந்த ஆண்டு பறக்கும் கண்காணிப்பு கேமரா ஈடுபடுத்தப்படுகிறது. இதேபோல் வனத்துறை சார்பிலும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத் தும் சோதனை நடந்து வருகிறது. 

No comments:

Post a Comment