மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

மதம் அறிவியலிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நிகழ்வு!

இத்தாலி நாட்டின் பைசா  நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் கலிலியோ (15-02-1564) பிறந்தார். 

மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும்.

காரணம், ஆதாரமற்ற நம்பிக்கையை விட ஆதாரத்தின் அடிப்படையிலான‌ விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது. அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள்  கலிலியோ மிக முக்கியமானவர்.  

நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசைக்  கலைஞரின் மகனாகப் பிறந்தார். பைசா நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். கணிதத்துறை பேராசிரியராக பைசா பல்கலைக்கழகத்திலும் படூவா பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார். ஏற்கெனவே இருந்து வந்த தொலை நோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார். உலகம் தட்டை என்றும், பிரப‌ஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன என்றும் பைபிள் சொல்ல, அதை கிறிஸ்தவம் நம்பிக்கொண்டிருந்த கால கட்டத்தில்... சில துணைக்கோள்கள் வியாழன் கோளைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தார். மத உலகைப் பொறுத்தவரை இது ஒரு அதிர்ச்சியான தகவலாக இருந்தது. கடவுளின் வார்த்தையான “பூமியைத்தான் எல்லா கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன” என்பதை முறியடிப்பதென்றால் சும்மாவா..?

உண்மையில், இந்த மூட நம்பிக்கைக்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ் - சூரியனை மய்யப்படுத்திய, “பூமி உள்பட சூரியக் குடும்ப கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றுகின்றன” என்ற‌ அவரின் கண்டுப்பிடிப்பை வழிமொழிந்தவர் புருனோ.

இதனை மதவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மதம் யானைக்கு மட்டுமல்ல, மனிதனுக்கு பிடித்தாலும் ஆபத்தாயிற்றே..! கொலைக்காரர்கள் கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றார்கள். புரூனோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அதே கருத்துகளைத்தான் கலிலியோவும் ஆதாரத் தோடு கூறி உறுதிப்படுத்தினார். மதம் மருண்டது என்றாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

விண்ணைப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகள் படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரானார். 1642 சனவரி 8இல் மரணம் அடைந்தார். கலிலியோ மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து 1737ஆம் ஆண்டு அவரது உடல் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்டு சாண்டாகிளாஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment