கடலூர், டிச.11 மாண்டஸ் புயல் கடலூருக்கு பெரு மழை ஏதும் தராமல், கடல் சீற்றத்துடன் கரையை கடந்து சென்றுவிட்டது. இந்த சீற்றத்தால் கடற்கரையோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், 8.12.2022 அன்று இரவு மாமல் லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத் துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புயல் அமைதியாக கரை கடந்தது
வானிலை கணிப்புகளின் அடிப் படையில் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகமும் முழு அளவில் தயார் நிலையில் இருந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
28 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 40 பேரும் சென்னையில் இருந்து வந்து கடலூரில் முகா மிட்டனர். இதுதவிர கடலூர் மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து 240-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் மீட்பு உபகரணங்களுடன் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். மேலும் மக்களை தங்க வைப்பதற்காக 40 புயல் பாதுகாப்பு மய்யங்கள் உள்பட 223 தங்கும் இடங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டன. ஆனால், மாண்டஸ் புயல் கடலூர் மாவட்டத்தை எந்தவகையி லும் தொந்தரவு செய்யாமல், அமை தியாக கரையை கடந்து சென்றுவிட்டது. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை என்பது மிக கனமழை என்பதை உணர்த் துவதாகும். ஆனால் அத்தகைய அளவில் மழை பொழிவு என்பது மாவட்டத்தில் பதிவாகவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் சாரல் மழையோடு, கடும் குளிர்தான் நீடித்தது.
கடலூரில் நடுங்க வைத்த இந்த குளிர் நீடித்த நிலையில் மாண்டஸ் புயல் மால்லபுரத்தில் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கியது. அந்த நேரத்தில் கடலூர் நகரில் பலத்த காற்றுடன் மழை பொழிவு இருந்தது. இதனால் நகரில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இந்த மழையும் சிறிது நேரம் தான் நீடித்தது. கடல் சீற்றத்தால் சில மரங்கள் சாய்ந்தன. மழை, காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டு இருந்தாலும், கடல் நேற்று முன்தினம் காலை முதல் இருந்தே சீற்றத்துடன் தான் காணப்பட்டது. புயல் கரையை கடந்த சமயத்தில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 14 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்ததால், கடல் ஒருவித கொந்தளிப்புடனே இருந்தது. இதனால் பல இடங்களில் கடற்கரை யோரம் மண் அரிப்புகள் ஏற்பட்டன. இதில், கடலூர் அடுத்த சுபஉப்பலவாடி கடற்கரையில் அதிக மண் அரிப்புகள் ஏற்பட்டது. கரையோர பகுதியில் நடப்பட்டு இருந்த பனை மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் சில மண் அரிப்பால் கீழே விழுந்தன. அதேபோல், சுப உப்பலவாடியில் இருந்து கடற் கரைக்கு செல்லும் சாலையும் அடித்துச் செல்லப்பட்டது.
அய்யப்பர்கள் அமைத்த பந்தல்மீது மரம் சாய்ந்தது
இதேபோல் மாவட்டத்தில் கடற்க ரையோரம் உள்ள பல்வேறு கிரா மங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மேலும், பெரிய கங்கணாங்குப்பத்தில் சென்னை-கடலூர் சாலையில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சென்று சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். அதேபோல், பண்ருட்டி அடுத்த நடு மேட்டுக் குப்பத்தில் வேப்ப மரம் ஒன்று, அந்த பகுதியில் அய்யப்ப பக்தர்கள் அமைத்திருந்த பந்தல் மீது சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மாண்டஸ் புயல் கடலூர் மாவட்டத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், கடற்கரையோர பகுதியில் சில பாதிப்புகளை மட்டும் கடல் சீற்றம் ஏற்படுத்தி சென்று இருக்கிறது. புயல் கரையை கடந்த நிலையில் நேற்று காலை (10.12.2022) கடலூரில் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால், மக் களும் கடற்கரைக்கு அனுமதிக்கப்பட் டார்கள். நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமா தேவியில் 37 மில்லி மீட்டரும், அதற்கு அடுத்த படியாக பண்ருட்டியில் 36 மி.மீ. மழையும் பதிவானது. குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது என்பது குறிப் பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment