அன்பிற்கும், பாராட்டுதலுக்குமுரிய திராவிடர் கழகத் தலைவர் திருமிகு.கி.வீரமணி MA.,BL., அவர்களுக்கு அன்புடன் எழுதுவது.
தங்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. மதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவராக அமர்ந்து, பல்லாண்டுகளாகத் தாங்கள் ஆற்றிவரும் இனமானப் பணிகளை 90-ஆம் ஆண்டு பிறந்த நாளில் பாராட்டி மகிழ்கின்றோம். தந்தை பெரியார் அவர்களின் வழியில், கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் உறுதியுடன் நின்று பணியாற்றி வரும் தங்களின் குறிக்கோள் வாழ்வு மிகச் சிறப்பானதாகும்.
90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாக் காணும் தாங்கள் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழினத்திற்குத் தொடர்ந்து தொண்டாற்ற நமது நெஞ்சம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு,
பொன்னம்பல அடிகளார்
No comments:
Post a Comment