கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் நினைவு நாள்

24.12.2022

வடலூர்

வடலூரில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு காலை 7.30 மணி முதல் வடலூர் நகரத் தலைவர் புலவர் ராவணன் தலைமையில் மண்டல மகளிர் அணி செயலாளர் ரமா பிரபா முன்னிலையில் ஜோதி நகர் சரஸ்வதி நகர் வடலூர் குறுக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவிப்பர்

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 8.30மணி அளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா பெரியார் செல்வம் தலைமையில் நகர தலைவர் கனகராசு முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் மாலை அணிவிப்பர்

ஆடூர் அகரம்

ஆடூர் அகரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நகர தலைவர் தா,கனகராசு மாலை அணிவிப்பார்

அப்பியம் பேட்டை

அப்பியம்பேட்டை தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் தலைமையில் ஒன்றிய செயலாளர் செந்தில் வேல் மற்றும் தோழர்கள் காலை 8 மணிக்கு மாலை அணிவிப்பர்

கடலூர்

கடலூர் தந்தை பெரியார் சிலைக்கு காலை 9.30 மணி அளவில் மாவட்ட செயலாளர் தென் சிவக்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி நகரத் தலைவர் எழில் ஏந்தி முன்னிலையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவிப்பர்

நெய்வேலி

நெய்வேலி நகரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் நகரத் தலைவர் இசக்கிமுத்து செயலாளர் ரத்தின சபாபதி முன்னிலையில் காலை 8 மணிக்கு மாலை அணிவிப்பர்

சிறுத்தொண்டமாதேவி பெரியார் நினைவு சமத்துவபுரம்

பண்ருட்டி வட்டம் சிறுத்தொண்டமாதேவி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 8 மணி அளவில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன் முன்னிலையில் மாலை அணிவிக்கப்படும்

குறிப்பு: தோழர்கள் அனைவரும் அய்யா சிலைகள் இல்லாத ஊர்களில் தந்தை பெரியார் படத்தை மாலையிட்டு வைத்து நினைவு நாளை கடைப்பிடிக்க வேண்டுகிறோம்

- திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்


No comments:

Post a Comment