தருமபுரி, டிச. 13- தருமபுரி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு.முல்லை யரசுக்கு தமிழ்நாடு அரசு, தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அவருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சால்வை அணி வித்து கழகப்பொறுபபாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயலாளர் பாவலர் பெரு.முல்லையரசு நடை முறை வாழ்க்கையில் தூய தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாது காப்பிற்கும், உறுதுணையாக இருப்பதனை பாராட்டி தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் சார்பாக 2021 ஆம் ஆண்டிற்கான தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கியமைக்கு தருமபுரி மாவட்ட கழக சார்பில் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி தலைமையில் மண்டல திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில பகுத் தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.சேட்டு, மாவட்ட இளைஞ ரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், ஒன்றிய செயலாளர் மணி, அச்சக உரிமையாளர் மு.முத்தமிழ், இளை ஞரணி பொறுப்பாளர்கள் நாச் சியப்பன், நவீன் குமார், மோகன் குமார் ஆகியோர் நேரில் சென்று பாவலர் பெரு.முல்லை அரசுவை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment