பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்போம் உறுதிமொழி ஏற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்போம் உறுதிமொழி ஏற்பு

தஞ்சை, டிச. 11- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் 10.12.2022 சனிக்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்போம் உறுதிமொழி ஏற்பு நடைபெற் றது.

இந்நிகழ்ச்சிபல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ‘பெண்கள் பாதுகாப்பு பெட்டி'யை திறந்து வைத்தார். அதன் பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.செ.வேலு சாமி கீழ்க்கண்ட உறுதிமொழி களைப் படித்தார்.

"பெண்களுக்கு எப்பொழு தும் உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பேன் என்றும், அவர்க ளுக்கு எதிரான வன்முறையான நடத்தைகளில் இருந்து விலகி இருப்பேன் என்றும் உறுதியளிக் கிறேன்".

"பணியிடத்திலும் சமூகத்தி லும் பெண்களின் கண்ணியத்தை நான் மதித்து பாதுகாப்பேன்".

"பெண்களுக்கு எதிரான எந்த விதமான பாலின பாகு பாடையும் எதிர்ப்பதாக நான்" உளமார உறுதியளிக்கிறேன்.

இவ் உறுதிமொழிகளை  பணியாளர்களும் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டனர். 

உள்ளக புகார் குழு அமைப் பின் தலைவர் பேராசிரியர் உமையாள் சுந்தரி நிகழ்வினை ஒருங்கிணைத்தார். 

No comments:

Post a Comment