அகமதாபாத்,டிச.11- குஜராத் சட்டமன்றத் திற்கு 2 கட்டங்களாக 182 தொகுதிகளில் தேர் தல் நடைபெற்றது. தேர் தலில் பதிவான வாக் குகள் கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டன. இத் தேர்தலில் 156 தொகுதி களில் வெற்றிபெற்று குஜராத்தில் தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 17 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 182 உறுப்பினர் களில் ஒருவர் மட்டுமே இஸ்லாமியர் என்கிற அதிர்ச்சித்தகவல் வெளி யாகியுள்ளது.
ஜமால்பூர்-ஹெடியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங் கிய இம்ரான் கெடவாலா 13 ஆயிரத்து 658 வாக் குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இவர் கடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டி யிட்டு சட்டமன்ற உறுப் பினராக தேர்தெடுக்கப் பட்டார். தற்போதைய தேர்தலில் இம்ரானுக்கு மீண்டும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கிய நிலை யில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பூஷன் புட்டோவைவிட 13 ஆயி ரத்து 658 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மக்கள் தொகையில் 10 விழுக் காட்டினராக இஸ்லாமி யர்கள் உள்ளனர். காங் கிரசு கட்சியின் சார்பில் முஸ்லிம்கள் ஆறு பேர் வேட்பாளர்களாக நிறுத் தப்பட்ட நிலையில் இவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜக சார்பில் ஒரு இஸ் லாமியர்கூட வேட்பாள ராக நிறுத்தப்படவில்லை. பாஜக வரலாற்று வெற்றி பெற்றதாகக் கூறிக் கொள்கின்ற அதேநேரத் தில் அக்கட்சியில் சிறு பான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு இடமில்லை என்று நிரூ பணமாகியுள்ளது.
No comments:
Post a Comment