பாளையங்கோட்டை, டிச.8 நெல்லை பாளையங்கோட்டை அருகே கார்த்திகை தீபத்தன்று (6.12.2022) அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் மது போதை யில் இருந்த நபர் குதித்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் பகுதி யில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் கார்த்திகையை முன் னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் மளமளவென பற்றி எரிந்துகொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் குதித் துள்ளார். இதில் படுகாயம டைந்த அவரை பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் இருந்த மக்கள் சொக்கப்பனை எரிவதை காணொலி எடுக்கும் போது முருகன் தீயில் குதித்த காட்சியும் பதிவாகியுள்ளது.
அந்தக் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment