மதுரை, டிச. 1- பல்கலைக்கழக மானியக் குழுவான யுனிவர் சிட்டி கிராண்ட் கமிசன் (யு.ஜி. சி.) நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மனு ஸ்மிருதி, வேதங்கள், பாகவதம், இதிகாசங்கள், அர்த்தசாஸ்தி ரம், மன்னர் ஆட்சியின் மேன் மைகள் - இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு கருத்தரங்கங்கள் நவம்பர் 26 அன்று நடத்தவேண்டும் என்று ஆணையிட்டதைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார் பாக மதுரையில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் மதுரை கிரைம் பிரிவு அருகில் உள்ள தமிழக எண்ணெய்ப்பலகாரம் கடை அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டியன் தலைமையேற்றார். மதுரை பல்கலைக் கழக மாணவர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு திரா விடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக் குழுத்தலைவர் தே.எடிசன்ராசா, மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம், காப்பாளர் சே.முனியசாமி, மாணவர் கழக அமைப்பாளர் செ.நிலவரசி, மாணவர் கழக செயலாளர் ச.மருதுபாண்டி, மாணவர் கழக அமைப்பாளர் ச.அறிவுச்செல்வி, புற நகர் மாவட்ட செயலாளர் த.ம.எரி மலை, எஸ்.எஃப்..அய். இயக்கத் தைச் சார்ந்த பிருந்தா, பாலா, முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநி லத்தலைவர் முனைவர் வா. நேரு, மாநில அமைப்புச் செய லாளர் வே.செல்வம் முன்னி லையில் திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞர் இராம். வைரமுத்து தொடக்க உரை யாற்றினார்.
அவர் தனது தொடக்க உரையில் அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 அன்று இப்படிப்பட்ட பிற் போக்குத்தனமான கருத்து களை மக்கள் மத்தியில் புகுத் திட நினைக்கும் ஒன்றிய அர சைக் கண்டித்தும்,அதன் அங்க மாக அதனை செயல்படுத்த முனையும் யு.ஜி.சி.யைக் கண் டித்தும் உரையாற்றினார். தொடர்ந்து மறுமலர்ச்சி தி.மு.க.தொழிற்சங்கத்தலைவர் மகபூப்ஜான் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் நிறை வுரையினை மாநில வழக்குரை ஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் 'வேதங்கள், புராணங் கள், இதிகாசங்கள்' எல்லாம் எப்படி நம்மை இழிவு படுத்து கிறது என்பதையும், இந்த மண் ணின் மைந்தர்களான திரா விட இனமக்களை படிக்கவிடா மல் ஆக்குவதற்காக ஆக்கப் பட்டவையே இதிகாசங்கள் என்பதையும், எப்படி இராமா யணத்தில் சம்பூகன் வதை நிகழ்ந்தது என்பதையும், மகா பாரதத்தில் ஏகலைவனின் கட் டைவிரல் வெட்டப்பட்டது என்பதையும் மக்கள் மத்தியில் விளக்கி, இன்றைய ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ்.சொல்லும் வேலைகளைச் செய்கிறது, மறு படியும் நம்மை, நமது மாணவர் களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் இழுத்துச் செல்லும் வேலையை யு.ஜி.சி. செய்கிறது என்பதையும், இதனை வன்மை யாகக் கண்டிப்பதோடு, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட் டும் அடுத்தடுத்த போராட்டங் களிலும் பங்கேற்று, யு.ஜி.சி.யின் சதியை முறியடிப்போம் என மக்களுக்குப் புரியும்வண்ணம் பல எடுத்துக்காட்டுகளோடு சிறப்பாக உரை ஆற்றினார்.மதுரை கல்லூரி மாணவர் யுகேசு நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் கழக மண்டல தலைவர் கா.சிவகுருநாதன், மண்டல செயலாளர் நா.முரு கேசன், மாவட்ட அமைப்பா ளர் இரா.திருப்பதி,மாவட்ட துணைத்தலைவர் பொ.பவுன் ராஜ்,புற நகர் மாவட்ட இளை ஞர் அணித்தலைவர் பா.முத் துக்கருப்பன்,மாவட்ட இளை ஞர் அணித்தலைவர் க.சிவா, செயலாளர் பேக்கரி கண்ணன், புற நகர் மாவட்ட இ.அ.செய லாளர் பு.கணேசன், புற நகர் மாவட்ட அமைப்பாளர் ரோ. கணேசன், ஒன்றிய அமைப்பா ளர் து.சந்திரன்,புற நகர் மாவட்ட இ.அ.அமைப்பாளர் ஜெ.பாலா, பொதுக்குழு உறுப் பினர் ராக்கு தங்கம், சோ.சுப் பையா, ஆட்டோ செல்வம், இரா.லீ.சுரேசு, இரா.இளங்கோ, இ.அ.அமைப்பாளர் அ.வேல் துரை, புற நகர் மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர் மன்னன் வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, புதூர் பாக்கியம், அண்ணா நகர் தனுஷ்கோடி, செந்தில் குமார், கு.மாரிமுத்து, சு.மணி ராஜ், பெரி.காளியப்பன், இரா.அழகுபாண்டி, பெரியார் பிஞ்சு அ.நன்னன், விராட்டி பத்து நல்லதம்பி, அ.ராஜா, கோரா, செல்லூர் இராஜேந் திரன், கோ.கு.கணேசன், தன சேகரன், உள்ளிட்ட பல தோழர் கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment