நூற்றாண்டும் காண்பார் - நம் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

நூற்றாண்டும் காண்பார் - நம் தலைவர்!

கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்


நூற்றாண்டும் காண்பார் - நம் தலைவர்!

பெரியாருக்குப்

பிறகு

பிழைக்குமா

இந்த இயக்கம்?

பித்துக் குளிகள்

பிதற்றினர்

இருக்கிறது - மேலும்

வலிமை வாளேந்தி

நிற்கிறது!

சிலிர்க்கிறது

எதிரிகளைக்

கேட்டுப் பார்!

விடை கிடைக்கும்

வெருட்டென்று!


நினைவிருக்கிறதா?

வீரமணியைப் பாடை கட்டி

பழனியிலே பார்ப்பனர்கள்

சுமந்து சென்றனரே...

எவ்வளவு ஆத்திரம்!

‘ஒரு சூத்திரன்’ பிணத்தை

நான்கு பார்ப்பனர்கள்

சுமந்து சென்றனரே

‘எங்கள் கொள்கைக்கு

வெற்றி வெற்றி!’ என்று

நனைத்து அடித்தாரே

நம் தலைவர்!

செத்தான் பார்ப்பான்

அப்போது தான்!


எதிரிகள் எடை போடுவதில்தான்

நம் சரக்கின் தரம் தெரியும்

இதுவே தந்தை பெரியாரின்

அளவுகோலன்றோ!

ஈ.வெ.ரா.வுடன்

இறுதிச் சடங்கு

நடந்து முடியும்

இந்த இயக்கத்திற்கென்று

இனிப்பு வடை சுட்டு

இரைப்பையை நிரப்பிக்

குதி யாட்டம் போட்டனரே!

குக்கல் போல் குரைத்தனரே!


‘‘பெரியார் உலக மயம்

உலகம் பெரியார் மயம்!’’ என்ற

திசை நோக்கி

படை நடத்துகின்றார்!

நாடாளுமன்றத்திலும்

‘‘வாழ்க பெரியார்!’’

‘‘வெல்க திராவிடம்!’’

வெண்கலக் குரல்கள்

வெடிக்கின்றனவே!


‘‘திராவிட மாடல்’’ அரசு

பெரியார் பிறந்த நாளை

‘‘சமூகநீதி’’ நாளாக்கி

அரசாணை பிறப்பித்துள்ளதே!

அண்ணல் அம்பேத்கரின்

பிறந்த நாளை

சமத்துவ நாளாக

அறிவித்தாரே!

உஞ்சி விருத்திகளையும்

உறுதிமொழி எடுக்க வைத்தாரே -

சமூகநீதிக்கான சரித்திர நாயகர்

நம் மானமிகு மாண்புமிகு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


வெள்ளியைக்

கொடுத்தோம் -

எடைக்கு எடை

தங்கத்தையும்

கொடுத்தோம்

தவறியும் தவறு

செய்யத் தெரியாத

தமிழர் தலைவருக்கு

தன்னுயிரையும் கொடுக்க

தயார் தயார் என்று

கருஞ்சட்டைப் பட்டாளம்

கருஞ்சிறுத்தையாய்

கர்ச்சித்து நிற்கிறது!


பெரியாருக்குப்

பிறகு

பிழைக்குமா

இந்த இயக்கம்

என்ற

பித்துக் குளிகளுக்கு

இதுதான் சவுக்கடி!


தொண்ணூறல்ல

நூற்றாண்டு விழா

மேடையிலும்

நிமிர்ந்து நிற்பார் -

நூல்களின் ஆதிக்கத்தை

அறுத்து அறுவடை செய்வார்

ஆசிரியர் வீரமணி!


அணிவகுப்போம் -

அணிவகுப்போம்

ஆர்ப்பரிப்போம் -

அரிமாக் கடலாய்!

அய்யா பணி முடிப்போம்

ஆசிரியர் தலைமையில்!


அய்யா வாழ்க!

அம்மா வாழ்க!

ஆசிரியர் பெருமகனார்

வாழிய வாழியவே!

No comments:

Post a Comment