சென்னை, டிச.4- வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தால் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று தென்மண் டல அய்.ஜி.க்கு மாநில தாழ்த் தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். இவர், தனக்கு சொந்தமான நிலத்தை சிலர். ஆக்ரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், தன்னை அந்த நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாக வும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்தார். சட்டத்துக்கு புறம்பாக நிலத் தின் ஒரு பகுதியை போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், இதுசம்பந்தமாக காவல் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரை விசா ரித்த ஆணையம், மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கையை அறிக்கையாக தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளருக்கு கடந்த 10.6.2022 அன்று உத்தரவிட் டது. இதன்பின்பு அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் கால அவகா சம் வழங்கியது. இருந்தபோதிலும் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை. இதைத் தொடர்ந்து அவர் நேரில் ஆஜராக ஆணை யம் உத்தரவிட்டது.ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்தநிலையில் வழக்கு விசாரணையை கடந்த 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த ஆணை யம், அன்றைய தினம் அவர் விசாரணைக்காக கண் டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனாலும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஜராக வில்லை. அவருக்கு பதிலாக கூடுதல் காவல்துறை கண் காணிப்பாளர் மாரிராஜன் ஆஜரா னார்.
இதை ஏற்க மறுத்த ஆணை யம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: "நெல்லை காவல் துறை கண்காணிப்பாள ரின்இந்த செயல் ஆணையத் தின் உத்தரவு தம்மை கட்டுப்ப டுத்தாது என்றும், ஆணையத் தில் நேரில் ஆஜராவது தனது தகு திக்கு குறைவானது என கருது வது போன்று இருக்கிறது.
எனவே, நெல்லை காவல் துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடிவாரண்டு பிறப் பிக்கப்படுகிறது. நெல்லை காவல்துறை கண்காணிப் பாளரை கைது செய்து வருகிற 28-ஆம் தேதி ஆஜர்படுத்த தென்மண்டல அய்.ஜி.க்கு உத்தரவிடப்படுகிறது.
அபராத தொகையை நெல்லை மாவட்ட ஆட்சியர் வசூலித்து அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment