நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சாடல்
புதுடில்லி,டிச.10- நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் மக்களவையில் 8.12.2022 அன்று நேரமில்லா நேரத்தின்போது உரையாற்றியபோது, மகளிர் 33 விழுக் காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு அக்கறை காட்டவில்லை என்று சாடினார்.
அவர் உரையில் குறிப்பிட்டதாவது,
“மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கொண்டு வருவதில் இந்த அரசின் அலட்சியமான, அக்கறையற்ற அணுகுமுறையால் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் ஏற்பட்டு உள்ளது.
இந்த அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதியில் இந்த வாக்குறுதியை அளித்து, அதனை நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட் சிக்கு வந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகியும், இன்னும் மசோதாவை நிறைவேற்றவில்லை.
அப்படியென்றால் அந்த தேர்தல் வாக்குறுதிகள் கேலிக்கூத்து அல்லது ஏமாற்று வேலை என்றாகி விட்டது. வாக்குறுதி கொடுத்தால், அது நிறை வேற்றப்பட வேண்டும். கெட்ட வாய்ப் பாக இந்த அரசாங்கம் பாசாங்கு செய் கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக் கும் உன்னத நோக்கங்கள் பற்றிய பகிரங்க அறிக்கைகள், செயலில் பிரதி பலிக்கவில்லை.
17ஆவது மக்களவையில் பெண் களின் இருப்பு 15 சதவீதம் கூட இல்லை, மாநில சட்டப்பேரவைகளிலும் பாலின ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ளது. நமது அரசமைப்பின் 4-ஆவது பிரிவு அனைத்து இந்திய பெண்களுக்கும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.
பெண்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. முடிவெடுக்கும் அமைப்பு களில் பெண்களை பிரதிநிதித்துவப் படுத்த உரிமை உண்டு. எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, இனியும் காலம் தாழ்த்தாமல், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment