தஞ்சை, டிச. 6- பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) மற்றும் தமிழ் நாடு பாரா வாலிபால் சங்கத்துடன் இணைந்து வேந்தர் கோப்பை - மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண் கள் பாரா கைபந்து வாகையர் பட்டப் போட்டி பரிசளிப்பு விழா 03.12.2022 அன்று நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா சிறப்பு விருந்தி னர் மற்றும் போட்டியாளர்களை வர வேற்று பேசினார்.
டாக்டர் மக்கள் ஜி.ராஜன், தலைவர் - தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் அவர்கள் சிறப்புரையாற்றும் போது இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருக்கும் போது உடல் ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என்று குறிப்பிட்டார். மேலும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடவேண்டும் என்றார்.
சனவரி மாதத்தில் மாற்றுத் திறனா ளிக்கான விளையாட்டுப் போட்டி சென்னையில் நடக்க இருப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வர இருப்பதாகவும் கூறி னார். என்றைக்கும் மாற்றுத் திறனாளி பெண்கள் எதற்கும் சளித்தவர்கள் அல்ல மாற்றம் செய்யும் திறனாளிகள் என்று குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் திரு டி.கே.ஜி.நீல மேகம் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப் பினர் அவர்கள் தலைமையுரையாற்றும் போது இந்த சிறப்பு வாய்ந்த இந் நிகழ்வில் கலந்துகொள்வதில் பெரு மைப்படுகிறேன். டாக்டர் கலைஞர் அவர்கள் உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லினை மாற்றுத் திறனாளி என்று குறிப்பிட வைத்தார். திருநங்கை என்ற பெயரை வைத்தவரும் தலைவர் கலை ஞர் அவர்கள் தான் என்று குறிப்பிட் டார். மாற்றுத் திறனாளிகள் துறையை இன்றைய முதலமைச்சர் அவர்கள் கையில் வைத்துள்ளார்கள். இந்த ஆண்டு எனக்கு மாற்று திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு என்னுடைய முழுப் பங்கினை அளிக்க இருக்கின்றேன் என்று கூறினார்.
மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் சென்று வருவ தற்கு ஒரு நடைமேடை போட்டுள்ளார் நமது தமிழ்நாடு முதலமைச்சர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
டாக்டர் அஞ்சகம் பூபதி, துணை மேயர் தஞ்சாவூர் மாநகராட்சி அவர் கள் சிறப்புரையாற்றும் போது தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர் களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பல நிலைகளிலும் வெற்றியடை வேண் டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இராமநாதன் துளசி வாண்டையார் தலைவர் பாரா வாலிபால் சங்கம் தஞ்சாவூர் அவர்கள் கலந்துகொண்டார்.
இறுதியாக வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசினை வேலூர் மாவட்டமும், இரண்டாம் பரிசினை கடலூர் மாவட் டமும், மூன்றாம் பரிசினை இராணி பேட்டை மாவட்டமும், நான்காவது பரிசினை திருவள்ளுவர் மாவட்டமும் பெற்றது. பெண்கள் அணியில் முதல் பரிசினை மதுரை மாவட்டமும், இரண் டாவது பரிசினை விருதுநகர் மாவட் டமும் பெற்றனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஆண் மற்றும் பெண்கள் பாரா வாலிபால் போட்டியில் பங்கு பெற்ற வீரர்கள் 16 பேர் தேசிய அளவில் நடக்க இருக்கும் பாரா வாலிபால் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளர்கள் என்பதை டாக்டர் மக்கள் ஜி.ராஜன், தலைவர் - தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேஷன் அவர்கள் அறிவித்தார்கள்.
இறுதியாக நன்றியுரையை எஸ்.ஜி. செந்தில் செயலாளர் பாரா வாலிபால் சங்கம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment