சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணி யம்மை மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆசிரியர் இல்லத்தில் முதலமைச்சர்
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2.12.2022 அன்று காலை சென்னை அடையாறிலுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதலமைச்சருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். சிறிது நேரம் இருவரும் அளவளாவினர். தமிழர் தலைவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் முதலமைச்சர் பயனாடை அணிவித்தார். திமுக பொதுச்செயலாளர் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் முதலமைச்சருடன் சென்று தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், ஆசிரியர் 90, பிறந்த நாள் மலரை வழங்கி சிறப்பு செய்தார். முதலமைச்சரின் வருகைக் காட்சிப் பதிவு நேரலையாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய தூதர் வாழ்த்து
தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் மேதகு அலெக் அவுதேவ், செயலாளர் எங்கேனி, இந்தோ-ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலாளர் தங்கப்பன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் திடலில் கழகக் குடும்பத்தினருடன் சந்திப்பு விடுதலை சந்தாக்கள் பரிசளிப்பு
பெரியார் திடல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெருந்திரளாக குழுமியிருந்த கழகப்பொறுப்பாளர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கமிட்டு வரவேற்பளித்தனர். கழகக்கொடிகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டு பெரியார் திடல் விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை என நாடுமுழுவதுமிருந்து பல்வேறு அமைப்புகள், கட்சிகளைக்கடந்து பெரியார் கொள்கை பற்றாளர்கள், கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் குவிந்த வண்ணமிருந்தனர்.
இளைய தலைமுறையினர், மாணவச் செல்வங்கள், கொஞ்சும் மொழி பேசும் மழலைகளான பெரியார் பிஞ்சுகள் என அனைத்து தரப்பினரும் பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள 21 அடி உயர தந்தை பெரியார் முழு உருவச்சிலை அருகிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் படங்களைக்கொண்ட வரலாற்றுப்பதிவுகளுடன் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த படத் தொகுப்பு பதாகை முன்பாகவும் பலரும் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து கழகப்பொறுப்பாளர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர். விழா அரங்கில் குடும்பத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவும், சந்தாக்கள், நன்கொடைகளை அளிக்கவும் அணிவகுத்தனர். காண்போர் வியக்கும் வண்ணம் கட்டுப்பாட்டுடன் மாவட்ட வாரியாக, அணிகள் வாரியாக அணிவகுத்து சாரைசாரையாக சென்றவண்ணம் இருந்தனர். விடுதலை சந்தாக்களைப் பரிசளித்து தமிழர் தலைவருடன் படம் எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியர் அவர்களுடன் எடுத்துக்கொண்ட படத்தை வரலாற்றுப்பதிவாக ரூ.200 கட்டணம் செலுத்தி பலரும் பெற்றுக்கொண்டனர். ஆளுநரைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட கழகப்பொறுப்பாளர்கள் புத்துணர்ச்சியுடன் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர்.
தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக ஒரத்தநாடு கழகப்பொறுப்பாளர்கள் விடுதலை சந்தாக்களை பண நோட்டு மாலையாக அணிவித்தனர்.
கருநாடகா மாநிலத்திலிருந்து திராவிடன் சிட்டி மூவ்மெண்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் இயக்கமான டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் அண்ணாமலை பூங்கொத்து வழங்கி தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரசு கட்சிப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர், நாசே.இராமச்சந்திரன், உ.பலராமன், கு.செல்வப்பெருந்தகை, அடையாறு டி.துரை,வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக பொறுப்பாளர்கள்
தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, திமுக துணைப்பொதுச்செயலாளர் மக்களவை திமுக குழுத்துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், இ.பரந்தாமன், ராஜா, இருதயராஜ், பூண்டி கலைவாணன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, திமுக மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் தலைமையில் திமுக மாணவரணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிரசன்னா பல்லாவரம் நித்யானந்தம் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தும் புத்தகம் வழங்கியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மதிமுக துணைப்பொதுச்செயலாளர் துரை வைகோ பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மல்லை சத்யா, செந்திலதிபன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியதேவன், மாவட்டச் செயலாளர் ஜீவன், சைதை சுப்பிரமணி, மாவை மகேந்திரன், டி.சி.இராஜேந்திரன், கழகக்குமார், பொன்னேரி பிச்சை, கவிஞர் மணிவேந்தன், சிக்கந்தர், தென்றல் நிசார், பசும்பொன் மனோகர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் உதவியாளர் அடைக்கலம் உள்ளிட்ட மதிமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் பூங்கொத்து வழங்கி தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீதியரசர்கள் வாழ்த்து
மேனாள் நீயரசர்கள் ஏ.கே.ராஜன், து.அரிபரந்தாமன், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மேனாள் மாவட்ட நீதிபதி ஜியாவுதீன், உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் குணராஜ், கண்மருத்துவ வல்லுநர் மருத்துவர் இராதாகிருஷ்ணன், நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவ வல்லுநர் மருத்துவர் ச.கருணாகரன் ஆகியோர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கல்வியாளர்கள் ச.இராஜசேகரன், ஆர்.எஸ்.டி.மருது, தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், நக்கீரன் ஆசிரியர் கோபால், துணை ஆசிரியர் கோவி.லெனின், இங்கர்சால், புலவர் பா.வீரமணி, மறைமலை இலக்குவனார், பேராசிரியை தவமணி, பேராசிரியர் மு.நாகநாதன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி, செயலாளர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், பேராசிரியர்கள் பெ.ஜெகதீசன், ஜானகி, சிவப்பிரகாசம், அ.கருணானந்தம் மற்றும் சிங்கப்பூர் இலியாஸ், டாக்டர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அன்பழகன், இராம. அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், மதுரை வே. செல்வம், ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, இளைஞரணி மாநில செயலாளர் த.சீ.இளந்திரையன் மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், செய்யாறு கழக மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் தி. காமராஜ், தஞ்சை ராமகிருஷ்ணன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், பெரியார் பிஞ்சுகள் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கிய தென்றல் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இசையின்பன்-பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி குடும்பத்தினர் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
திராவிடர் கழக வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் த.வீரசேகரன் தலைமையில் விடுதலை சந்தாக்கள் பரிசளிக்கப்பட்டது. மூத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நினைவுப்பரிசு வழங்கினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில, மாவட்டப்பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் தலைமையில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் பகுத்தறிவுப்போராளி தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விடுதலை சந்தா பரிசளித்து குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இளைஞர் அணி மாநில செயலாளர் த.சீ.இளந்திரையன் தலைமையில் இளைஞரணி பொறுப்பாளர்கள் அரங்கில் எழுச்சி முழக்கமிட்டபடி தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டியன் மற்றும் மாணவர் கழகப்பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment