பெரியார் பாலிடெக்னிக்கில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

பெரியார் பாலிடெக்னிக்கில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா

வல்லம், டிச. 3- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் தலைவரும் இக்கல்லூரியின் நிறு வனரும் ஆகிய டாக்டர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் நிறுவனர் நாள் விழாவாக கொண்டாடப் படுகிறது. 

இந்த ஆண்டு நிறுவனத் தலைவரின் 90வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும்விழா நடை பெற்றது. இக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந் நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர் கள் கலந்து கொண்டனர்.

நிறுவனத் தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 21.11.2022 முதல் பல்வேறு திறன் மேம்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் கல்விப் பணியும் சமுதாயப் பணியும் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி, தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் தொண்டறம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி, நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் தமிழின மீட்பு வர லாறு என்ற தலைப்பிலான கவி தைப் போட்டி, மற்றும் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் பன்முகங்கள் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியும் நடைபெற்றது.

பல்வேறு திறன் மேம்பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் கலைத் திறனும் ஆர்வமும் இன்றைய இளைய தலைமுறை மாணவ மாணவிகள் தந்தை பெரியார் பற்றியும் நிறுவனத் தலைவரின் தொண்டறம் பற்றியும் அவர் தம் வாழ்வியல் சிந்தனைகளுடன் கூடிய சிறப்பான செயல்பாடுக ளையும் அறிந்து அவற்றை பின் பற்றக் கூடியவர்களாகவும் திகழ் கின்றார்கள் என்றால் அது மிகை யல்ல. 

மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்கள் நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் சிந்தனைகளோடு கூடிய கம்பீர மான தோற்றத்தை நம் கண்முன் நிறுத்துகின்றது என்ற பாராட்டுக் கள் மாணவ மாணவிகளுக்கு உற் சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment