‘ஆசிரியர் 90' ஒளிப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

‘ஆசிரியர் 90' ஒளிப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த 2.12.2022 சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர்  தளபதி மு.க.ஸ்டாலின்  அவர்களை, கழகப் பொதுச்செயலாளர்கள்  துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்று, ‘ஆசிரியர் 90' என்ற தலைப்பில்  அமைக்கப்பட்டு இருந்த ஒளிப்படக் கண்காட்சி அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அமைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களில், தந்தை பெரியார், மேனாள் முதலமைச்சர்கள் பச்சைத் தமிழர் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர்; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்,  மேயர் சிட்டிபாபு ஆகியோருடன் இளைஞராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ள அரிய ஒளிப்படத்தைக் கண்டு வியந்து, பழைய நினைவுகளை உடனிருந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார் முதலமைச்சர் அவர்கள். ஒளிப்படக் கண்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துள்ளீர்கள் என்று பாராட்டினார்.



No comments:

Post a Comment