பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
தஞ்சை, டிச. 5- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 3.12.2022 சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக வேந்தர் டாக் டர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள், நிறுவ னர் நாள் விழா மற்றும் நிர்வாக கல்வி உதவித் தொகை வழங் கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா தலைமைலயுரையாற் றும் போது, மேல்நிலைப்பள்ளி பள்ளி தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங் கும் மாணவர்களின் குடும்பத் தில் முதல் பட்டதாரி மாணவர் களுக்கும் மற்றும் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உத வித் தொகை வழங்கப்பட்டது. இதில் 2,324 மாணவர்களுக்கு ரூபாய் 2 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட் டது. இத்தொகை மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவதற் காகவும், அவர்களை ஊக்கப் படுத்துவதற்காகவும் வழங்கப் படுகிறது என்று கூறினார். மேலும் நான்கு ஆண்டுகள் படித்து குரூப் 4 தேர்வு, வங்கித் தேர்வு எழுதி வேலைக்கு செல்வது என்பதை விட தான் படித்ததில் வேலை தேடி அவ்வேலையில் தனது முழுத் திறனையும் செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.
மேலும் மாணவர்கள் நல் லொழுக்கத்துடனும், படிப்பி லும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கென்று தனித் திறனை வளர்த்துகொள் ளுவதற்காக ‘ரேபோடிக்ஸ்' ஆய்வகம், ‘சிஎன்சி இயந்திர ஆய்வகம்' போன்று பல ஆய் வகங்கள் எங்களிடம் உள்ளது. பெற்றோர்களாகிய நீங்கள் தங்களுடைய பிள்ளைகளை இணைத்து அவர்களின் திறமை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக பொறியி யற் துறை பேராசிரியர் எஸ்.செந் தமிழ்குமார் உரையாற்றும் போது, குறிப்பாக கிராமத்து மாணவர்கள் மற்றும் பின் தங்கிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதாகவும், பட்டம் பெற்று வெளியில் செல்லும் போது படிப்புத் திறன் மற்றும் செயல் திறன் பெற்று வெளியில் சென்றால்தான் அவர்கள் தேடிய வேலை கிடைக்கும் என்றார்.
No comments:
Post a Comment