தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி திரட்டிய  விடுதலை சந்தா ரூ.15,700த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் (24-11-2022).

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  ஆகியோரிடம்  மேனாள் சட்டமன்ற திமுக உறுப்பினர்    கு.க.செல்வம்  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன்,வி.பன்னீர்செல்வம்.

காரைக்கால் மண்டல திராவிடர்  கழகம் சார்பாக நல்லாத்தூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செ. அமுதன்  விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை  புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணியிடம் வழங்கினார். உடன்: காரைக்கால் மண்டல  கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டல  கழக செயலாளர்  பொன். பன்னீர்செல்வம். 

ஈரோடு சேவா பேப்பர் மார்ட் உரிமையாளர்  காசி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர்  விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினர். (இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).

திருப்பூர் மாநகராட்சி 3-ஆம் மண்டலத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சி.கோவிந்தசாமி (தி.மு.க) விடுதலை சந்தா ரூ.10,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச்செயலாளர் யாழ்.ஆறுச்சாமி (24-11-2022).

திருச்சி சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ.10,000த்தை திருச்சி தொழிலதிபர் ஜான்சன் குமார் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பீம நகர் பகுதி செயலாளர் முபாரக் , ஜெயராஜ், விடுதலைச்சந்திரன் ஆகியோர்.(18.11.2022) 

சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம்  கோவிளம்பாக்கம் பொறியாளர் சி.மணிமாறன் (அ.இ.அ.திமுக) விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.மாவட்டச்செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.

  மாவட்டத்தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மகள் இரமணாதிலகம் ஆகியோர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். 

 நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர். மனோகரன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.  

 கோவை வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி   விடுதலை சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், போத்தனூர் வெங்கடேஷ், குறிச்சி ஆவின் சுப்பையா (28-11-2022)

சந்தா தொகை ரூ.20,000த்தை ஊராட்சி மன்ற தலைவர் வடமதுரை.ரேவதி நாகராஜ்   மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன், மண்டல தலைவர் மு.நாகராஜன்,  தொழிலாளர் கழக பேரவை தலைவர் அ.மோகன்,மாநில இளைஞரணி துணை செயலாளர் நா.கமல்குமார் ஆகியோர்(21.11.2022)

 உடுமலை 27ஆவது வார்டு நகராட்சி மன்ற உறுப்பினர் ரீகன் (தி.மு.க)  அய்ந்து விடுதலை ஆண்டு சந்தா ரூ.10,000த்தை  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், வழக்குரைஞரணி மாநில துணைத்தலைவர் உடுமலை ஜெ.தம்பிபிரபாகரன், தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.இளங்கோவன், மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆ.முனிஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.முருகேசு,மடத்துக்குளம் ஒன்றியதலைவர் மா.தங்கவேல் (28-11-2022) 

 திருவெறும்பூர்    சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ.16,000த்தை திருவெறும்பூர்  ஒன்றிய தலைவர் மாரியப்பன்  மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார்.(15.11.2022)

விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அரங்க. பரணிதரன் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் 13 ஆண்டு சந்தாக்கள் 10 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகையினை வழங்கினார்.

 ஊராட்சி மன்றத் தலைவர் நாஞ்சி கி.வ.சத்தியராஜ்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)

அய்ந்து விடுதலை ஆண்டு சந்தாக்களுக்காக விழுப்புரம் ஆர்.அலெக்ஸ் ரூபாய் பத்தாயிரத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: நகர திமுக செயலாளர் சக்கரை.


No comments:

Post a Comment