திருச்சி ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு: 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

திருச்சி ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு: 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுநர் பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.01.2023க் குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 - 62,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3 f73b76ce8949 fe29b f2a537cfa420e8f/uploads/2022/ 12/2022121242.pdf   என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்க ளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு), 3 ஆவது தளம், திருச்சி - 620001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas. gov.in/s3f 73b76ce8949fe29bf2a537 cfa420e8f/uploads/2022/12/20221 21242.pdf  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வை யிடவும்.

No comments:

Post a Comment