தென்காசி, டிச.14 ஆலங்குளம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 8 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு அதே வேனில் வந்து கொண்டிருந்தனர். ஜான் என்பவர் வேனை ஓட்டினார். நேற்று இரவு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் வெங்கடேசன், தியாகராஜன், ராஜா, சக்தி, ராஜன், 2 சிறுமிகள் உள்பட மொத்தம் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச் சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஆலங்குளம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். நெல்லை-தென்காசி சாலையில் நான்கு வழிச் சாலை பணிகள் நடந்து வருகிறது. பணிகள் நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் விளக்குகள் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், எனவே அவற்றை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Wednesday, December 14, 2022
'அய்யோ அப்பா!' வேன் கவிழ்ந்து 8 அய்யப்ப பக்தர்கள் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment