சென்னை, டிச. 14, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2 பேர் உள்பட மொத்தம் 5 மாவட் டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நெல்லை, திருச்சி, மதுரை, சிவகங்கை, உள் ளிட்ட 33 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாக வில்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கரோனா பதிப்பில் இருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் 58 பேர் தற்போது வரை கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் . . .
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,845 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியான வர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,658 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,40,592 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,19,97,66,734 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 49,263 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment