ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தகவல்
பிரஸ்லஸ், டிச.12 உக்ரைன்-ரஷ்யா போர், ஹைட்டியில் ஏற்படுத்தப் பட்டுள்ள குழப்பமான சூழல், மெக்சிகோவில் நிலவும் அசாதா ரண சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழு வதும் 2022-ஆம் ஆண்டு மட்டும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை 67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டு 47 பேர் கொல்லப் பட்டனர்.
கடந்தாண்டை ஒப்பிட்டால் இது 30 சதவீதம் அதிகம். இந்தத் தகவலை பன்னாட்டு ஊடக வியலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஊடக வியலாளர்கள் கூட்ட மைப்பு (IFJ) 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொழிற் சங்கங்கள் மற்றும் சங்கங்களில் இருந்து 600,000 ஊடக வல்லு நர்களை பிரதிநிதித்துவப்படுத்து கிறது. அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அந்தோணி பெல்லங்கர் விடுத் துள்ள அறிக்கையில்,
‘‘கடந்த ஆண்டு 47 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 67 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப்பட் டுள்ளனர். உலகம் முழுவதும் சிறைகளில் 375 பத்திரிகையா ளர்கள் அடைக்கப் பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஊடகவி யலாளர்களையும் கருத்துச் சுதந்தி ரத்தை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க உலக நாடு களுக்கு பன்னாட்டு ஊடகவிய லாளர்கள் கூட்டமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது
. பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அய்ந்து பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். கொலம்பியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment