புதுடில்லி, டிச. 3 நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களுக்கு கலந் தாய்வு நடத்தி 15 நாட் களுக்குள் நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி வழங் கியது. சூப்பர் ஸ்பெஷா லிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, கடந்த 2000 நவம்பரில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம்நாத் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம்உள்ளது. கடந்த ஆண்டுகளிலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிஇடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் இடஒதுக்கீட்டின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும்’’ என வாதிட்டனர். மனுதாரர்கள் தரப் பில், ‘‘இவ்வாறு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால், அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில் இடம்பெறும் மருத்து வர்களுக்கு இடம் கிடைப்பதில்லை’’ என வாதிடப்பட்டது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பாட்டீல் வாதிடும்போது, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் கடந்த 2016ஆ-ம் ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் முடிவு.ஏனெனில் இளநிலை மருத்துவப் படிப்பு மருத்துவர்களை உருவாக்குகிறது என்றால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகள் மருத்துவ நிபுணர்களை உருவாக்குகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரி நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். தேச நலனே முக்கியம்’’ என்றார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘நடப்பு கல்வியாண்டிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வை தமிழ்நாடு அரசு 15 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 15 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் 15 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் லெ.இறையன்பு நேற்று (2.12.2022) வெளியிட்ட அறிவிப்பு: டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராகவும், அத்துறையின் செயலராக இருந்த அபூர்வா, வீட்டுவசதி துறை செயலராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
வீட்டுவசதி துறை செயலராக இருந்த ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, டில்லி தமிழ்நாடு இல்லமுதன்மை உள்ளுறை ஆணையராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக சீர்திருத்த துறை செயலர்டி.ஆபிரகாம், வேளாண் துறை சிறப்பு செயலராகவும், பேரூராட்சிகள் துறை ஆணையர் ஆர்.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தொழில் துறை சிறப்பு செயலர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பு செயலராகவும், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.நந்தகோபால், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக வும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குர்ராலா, பேரூராட்சிகள் இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு சாலைப் பகுதி திட்டம் 2-இன் திட்ட இயக்குநர் பி.கணேசன், நகர ஊரமைப்புத் துறை இயக்குநராகவும், அப்பதவியில் இருந்தஇ.சரவண வேல்ராஜ், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராகவும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் அனில் மேஷ்ராம், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும், வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஏ.ஜான் லூயிஸ், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன மேலாண் இயக்குநராகவும், மருத்துவப் பணி யாளர்கள் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் எம்.என்.பூங்கொடி,சேலம் சேகோசர்வ் மேலாண்இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏ.ஜான் லூயிஸ், வருவாய் நிர்வாக இணை ஆணையர் பணியை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதில், சமூக நலத் துறை செயலராக இருந்த ஷம்பு கல்லோலிகர், விருப்ப ஓய்வு கோரியிருந்தார். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் தற்போது சுன்சோங்கம் ஜடக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க மசோதா தாக்கல்!
ராய்ப்பூர், டிச.3 சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு வரம்பு 76 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) சமூகத்தினருக்கான சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான இரண்டு சட்டதிருத்த மசோதாக்களை சத்தீஸ்கர் சட்டசபையில் நேற்று (2.12.2022) ஒருமனதாக நிறைவேறியது.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 32 சதவீதமும், தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு 13 சதவீதமும், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க சட்டமன்றம் முன்மொழிந்துள்ளது.பொருளாதாரத் தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளது, இதன்மூலம் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு வரம்பை 76 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment