புதுடில்லி, டிச 10- நாட்டில் 2017 முதல் 2021 வரையி லான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் கூடுத லான விவசாயிகள் தற் கொலை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்றத்தின் மேலவையில் ஒன்றிய வேளாண் துறை அமைச் சர் நரேந்திர சிங் தோமர் பேசும்போது, 2017ஆ-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய் துள்ளனர் என கூறியுள் ளார். இதன்படி, 2017ஆ-ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018ஆ-ம் ஆண் டில் 5,763 பேரும், 2019ஆ-ம் ஆண்டில் 5,957 பேரும், 2020-ஆம் ஆண்டில் 5,579 பேரும், 2021ஆ-ம் ஆண் டில் 5,318 பேரும் தற் கொலை செய்து கொண் டுள்ளனர்.
இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் மராட்டியம் மற்றும் கருநாடகாவில் விவசாயி களின் தற்கொலை அதி கரித்துள்ளதுடன், இந்த பட்டியலில் முதல் மற்றும் 2-ஆவது இடத்தில் அவை உள்ளன என்றும் அமைச் சர் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், பட்ஜெட்டில் விவசாயிக ளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை களை அரசு எடுத்து உள் ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக் கைகள், பிரதம அமைச்சர் பசல் பீம யோஜனா உள் ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment