இது ஏழைகளின் அரசா? கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடியாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

இது ஏழைகளின் அரசா? கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடியாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்!

புதுடில்லி, டிச 14 கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ள தாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர் மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று  (13.12.2022) ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தாவது:- வங்கிகள் தங்கள் இருப்பு நிலை ஏட்டை சரிசெய்யும் வித மாகவும், வரிப்பயனை பெறும் வகையிலும், முதலீட்டை அதி கரிக்கும் வகை யிலும் தங்களின் வழக்கமான நடவடிக்கையின் ஓர் அங்கமாக வாராக்கடன்களை தள்ளுபடி செய்கின்றன. வங்கி களின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்த கொள்கை அடிப்படை யிலும், ரிசர்வ் வங்கி வழிகாட் டுதலின்படியும் இது மேற் கொள்ளப்படுகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் தகவல்படி, கடந்த 5 நிதியாண் டுகளில் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக் கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய் துள்ளன. வாராக்கடன்கள் ரத்து செய் யப்பட்டாலும் அவற்றை திரும்ப வசூலிப்பதற்கான சட்ட நட வடிக்கை போன்றவை தொடரும். வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி வாராக் கடன்கள் உள்பட ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 596 கோடி கடன் களை மீட்டுள்ளன என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment