46ஆவது புத்தகக் காட்சி சென்னையில் ஜன. 6இல் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

46ஆவது புத்தகக் காட்சி சென்னையில் ஜன. 6இல் தொடக்கம்

சென்னை,டிச.13- சென்னையில் 46ஆவது புத்தகக் காட்சி, ஜன.6ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (12.12.2022) அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 46ஆவது புத்தகக் காட்சியை ஜன.6 முதல் 22ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேதி உறுதியானதும், திறப்பு விழா தேதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படும்.

கடந்த 45 ஆண்டுகளாக சென்னை உள்பட பல்வேறு புத்தகக் காட்சிகளை முன்னின்று நடத்தி பபாசியின் வளர்ச் சியை முன்னெடுத்து சென்ற அனைவருக்கும் நன்றி. சென்னை உலக புத்தகக் காட்சி வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். 

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment