ஆலப்புழா, டிச. 22-- கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சாரும் மூட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4.5 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் அச்சடிக்கும் கருவிகள் பறிமுதல்செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட நோட்டுகள் தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை என்அய்ஏ வசம் ஒப்படைப்பது குறித்து முடிவெடுப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நோட்டு அச்சடிக்க உதவிய திரு வனந்தபுரம் நேமத்தைச் சேர்ந்த ஷியாம் ஆற்றிங்கல் என்கிற ஷாம்நாத் (40), நோட்டு அச்சடிக்க உதவிய கொட்டாரக்கரைவலகம் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சசி (29) ஆகி யோரை விசாரணை அதிகாரி அடையாளம் கண்டுள்ளார். டிசைனிங் செய்த, மாவேலிக்கரையைச் சேர்ந்த ரஞ்சித் (49), சாரும்மூடு பகுதியில் முக்கிய வியாபாரியாவார்.
இவரை நூரநாடு சிறப்புக் காவல் ஆய்வாளர் சிறீஜித் தலைமை யிலான காவல்துறையினர் கைது செய்தனர். ரஞ்சித், பாஜகவின் சுனக்கரை பஞ்சாயத்து மேனாள் செயலாளர். ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், பேப்பர், லேமினேட்டர், பிரத்யேக வகை பசை, நோட்டுகளை வைத்திருந்த கார், சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான ஷாம்நாத் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
கொடுவிலாமூரியில் கிழக்கு கல்லடா ஊராட்சி மேனாள் தலை வர் கிளீடஸ் (45), தாமரைக்குளம் லேகா (38) ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஷாம்நாத் குறித்த விவரம் தெரியவந்தது. 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சிடப்பட்டுள் ளன. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கள்ள நோட்டை அடையாளம் காண முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர். பார்வையற்றவர்கள் அடையாளம் காணும் 3டி விளைவு மட்டுமே கள்ள நோட்டுகளில் இல்லை.
No comments:
Post a Comment