குரூப்-4, குரூப்-2 தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

குரூப்-4, குரூப்-2 தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு

சென்னை, டிச. 17- தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதில் நடப்பாண்டில் அறிவிப் புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத் தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம் பெற்றுள்ளது. 

இதில் குரூப்-2, 2ஏ காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, அதற்கான முதல் நிலை தேர்வு முடிந்த நிலையில், முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சமீபத் தில் வெளியிடப்பட்ட கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங் களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்க ளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அறிவிப்புகள் குறித்த அட்டவணை 

அடுத்த ஆண்டுக்கான புதிய அறிவிப்புகள், காலி பணியிடங்கள், அதற் கான தேர்வு நடைபெறும் மாதம், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம் குறித்த தகவல்கள் வரு மாறு:- 

ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக் கும் 762 பணியிடங்களுக் கும் அடுத்த ஆண்டு ஜன வரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடக்கும். இதற்கான தேர்வுகள் வரும் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்.

ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் வரும் 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, டிசம் பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். 

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க் கப் படக்கூடிய குரூப்-4 பணி களுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு அதற்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, அதே ஆண்டில் மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்படும். இதற்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு பின்னர் தெரி விக்கப்படும். 

அதேபோல், சுற்றுலா உதவி அதிகாரி, ஆராய்ச்சி உதவி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆணை யர், புள்ளியியல் உதவி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர் உள்பட பல் வேறு பதவிகளில் காலி யாக இருக்கும் பணியி டங்களுக்கும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment