தமிழ்நாடு தொழில் முனையங்கள் ரூ.3847 மதிப்பிலான முதலீடு ஈர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

தமிழ்நாடு தொழில் முனையங்கள் ரூ.3847 மதிப்பிலான முதலீடு ஈர்ப்பு

புதுடில்லி, டிச. 16- உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங் களில் ஒன்றிய அரசு உரு வாக்கியுள்ள பாதுகாப்பு தொழில் முனையங்களில் ரூ.24,000 கோடி மதிப் பிலான திட்டங்களை செயல்படுத்த புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள் ளன. 

மேலும், இந்த முனை யங்கள் நிறுவனங்கள் மூலம் ரூ.6,200 கோடி முதலீட்டை ஈர்த்துள் ளன. அதன்படி, உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில் முனையங்களில் (யுபிடிஅய்சி) ரூ.2,422 கோடி முதலீட்டை நிறு வனங்கள் மேற்கொண்டு உள்ளன.

அதேபோன்று, தமிழ் நாடு பாதுகாப்பு தொழில் முனையங்கள் (டிஎன்டி அய்சி) ரூ.3,847 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளன. யுபிடி அய்சி-க்காக இது வரை யில் 105 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள் ளப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.12,139 கோடியாகும். அதே போன்று டிஎன்டிஅய்சி-க்காக 53 நிறுவனங்களின் ரூ.11,794 கோடி மதிப் பிலான புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் கையெழுத்தா கியுள்ளன என்று ஒன்றிய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த வும், தளவாடங்களின் உற் பத்தி திறனை அதிகரிக் கவும் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில் முனையங்களை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் உத்தரப்பிரதேச பாது காப்பு தொழில் முனை யத்தை நிறுவியுள்ளது. இந்த தொழில் முனையம், ஆக்ரா, அலிகார், சித்ர கூட், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட முக் கிய நகரங்களில் அமைந் துள்ளது.

அதேபோன்று, தமிழ் நாட்டில் உள்ள பாது காப்பு தொழில் முனையம் சென்னை, கோயம்புத் தூர், ஓசூர், சேலம், திருச்சி ஆகிய அய்ந்து முக்கிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment