லக்னோ, டிச. 22, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மகா லுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. 17-ஆவது நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ் மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டடக் கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா விற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் சுமார் 370 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மகாலுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நிர் வாகம் சார்பில் தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. சுமார் 1.9 கோடி நிலுவைத் தொகையை 15 நாட்க ளுக்குள் செலுத்த வேண்டும் என அந்த தாக்கீதில் கூறப்பட்டுள்ளது. இதே போல் முகலாய மன்னர் அக்பரால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டைக்கும் சுமார் 5 கோடி வரி நிலுவைத் தொகை செலுத்தக் கோரி தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. முக லாய மன்னர்கள் தங்கள் தலைநகரை ஆக்ராவில் இருந்து டில்லிக்கு மாற்றுவதற்கு முன், ஆக்ரா கோட் டையில் இருந்தே ஆட்சி புரிந்து வந்தனர். இந்த ஆக்ரா கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்ன மாகவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு தவறுதலாக தாக்கீது அனுப்பப்பட் டுள்ளது என்றும் புராதான மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு சொத்து, குடிநீர் வரிகள் வசூலிக்கப்படுவதில்லை என்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment