27 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. சாதனைகளைக் கூறி வாக்குகள் கோராமல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

27 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. சாதனைகளைக் கூறி வாக்குகள் கோராமல்

மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும்

ஹிந்துத்துவக் கொள்கையையே நம்பி இருக்கிறது

[2.12.2022 நாளிட்ட இந்து ஆங்கில இதழின் தலையங்கம்]

நேற்று நடைபெற்ற குஜராத் மாநில 19 மாவட்டத்தின்  89  சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வரும் 5 ஆம் தேதியன்று எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பாரம்பரியமாக இரு துருவங்களாக விளங்கும் பா.ஜ.க., காங்கிரஸ் என்று இரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும் இம்மாநிலத் தேர்தலில் இப்போது ஆம் ஆத்மி கட்சியும் நுழைந்திருப்பது புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கிறது.  சூரத் நகரம் மற்றும் சவுராட்டிரா பகுதிகளில் பலமான சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உருவாகி இருப்பது பல தொகுதிகளில் மும்முனைப் போட்டியை உருவாக்கி இருக்கிறது. 2017 தேர்தலில் சவுராட்டிரா பகுதியின் பல மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மிக நன்றாகவே வெற்றி பெற் றுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு இம் மாநிலத்தில் களநிலை கட்சி கட்டமைப்பு இல்லாததால், அதன் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதை அளவிடுவது அவ்வளவு எளிதாக இல்லை.

தேர்தல் காலத்துக்கு முன்னதாக நடைபெற்ற மோர்பி பால விபத்தில் 141 பேர் உயிரிழந்த போதிலும், அந்த விபத்தையோ அதனுடன் தொடர்பு  உடைய லஞ்ச  ஊழல் குற்றச் சாட் டையோ, தேர்தல் பிரச்சாரப் பிரச்சினையாக காங்கிரஸ் கட்சி ஆக்கவில்லை. பிரதமர் மோடி மீது நேரடியாக தாக்குவதை தவிர்த்த காங்கிரசின் பிரச்சாரம், அன்றாட   ஆட்சி பிரச்சினைகளையும், லஞ்சஊழல், பணவீக்கம், வேலையில்லா திண் டாட்டம் போன்ற பிரச்சினைகளை மட்டுமே முன் வைப்பதாக இருந்தது.  2017 தேர்தல் பிரச் சாரத்துக்கு தலைமை தாங்கிய ராகுல்காந்தி இப்போதைய தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு முறைதான் வந்துள்ளார்.

 மோடி தலைமை தாங்கிய பா.ஜ.கட்சியின் பிரச்சாரத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது  சொந்த மாநிலமான குஜராத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். தேர்தல் அறிவிக் கப்பட்டதை அடுத்து அவர் சூரத், சவுராட்டிரா மற்றும் தெற்கு குஜராத்தின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், பன்னிரண்டு பேரணிகளிலும், சாலை சந்திப்பு கூட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். மோடியை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டது.  2002ஆம் ஆண்டு கோத்ரா மதக் கலவரங்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்ற பெரும்பாலான மதப் பிரிவி னையை ஏற்படுத்தும் உணர்ச்சி மிகுந்த பிரச்சி னைகளையே  நம்பியுள்ள பா.ஜ.க., இடையூறு இன்றி 27 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தும், தனது சாதனைகளைக்  கூறி வாக்குகளைக் கோராமல், இன்னமும் மத அடிப்படையில் மக்களை பிளவு படுத்தும் ஹிந்துத்துவக் கொள்கையையே பின்பற்றி வருவது  அதன் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவே இருக்கிறது.

நன்றி: 'தி இந்து' 02-12-2022

தமிழில்: த.க.பாலகிருட்டிணன் 

No comments:

Post a Comment