இலங்கை சிறையில் 24 தமிழ்நாடு மீனவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

இலங்கை சிறையில் 24 தமிழ்நாடு மீனவர்கள்

சென்னை, டிச.12  இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட தற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று மதிமுக. பொதுச் செய லாளர் வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அளித்துள்ள பதிலில்  இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல்  எல்லைக் கோட்டை தாண்டி, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த தாகக் கூறி இலங்கை அதிகாரிகளால் அவ்வப் போது கைது செய்யப் படுகின்றனர். 

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு ஒன்றிய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக் குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய் திகள் கிடைத்தவுடன், ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் இந்த  விவகாரத்தை எடுத்துக் கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டு களில் கிடைத்த தகவலின்படி, மொத்தம் 485 (2020இல் 74, 2021இல் 159, 2022இல் 252) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 66 இந்திய படகுகள் (2020இல் 11, 2021இல் 20 மற்றும் 2022 இல் 35) இலங்கை அதிகாரி களால் பறிமுதல் செய்யப் பட்டன. அரசின் தொடர் முயற்சியால் 461 மீனவர்கள் விடுவிக் கப்பட்டுள்ளனர்.  தற்போது இலங்கைக் காவலில் 24 இந்திய மீனவர்கள் உள்ளனர். இலங்கைக் காவலில் உள்ள  இந்திய மீனவர்களை முன்கூட்டியே  விடுவிப்பது குறித்து,  அந்நாட்டு அரசு  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வெளி யுறவுத் துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment