சென்னை, டிச 4 அரசு கலைஅறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 2,331 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் 2019ஆ-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தற்போது 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களின் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உயர்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.
அதன்படி, 2,331 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment