திருக்கழுகுன்றம்,டிச.8- எடையூர் கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான பிடாரி செல்லி யம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தாலி உட்பட 20 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே பொன்பதர்கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில், சுமார் 300 ஆண்டுகள் பழைமையான சிறீ பிடாரி செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. எடையூர், வீரகுப்பம், பல்லவீர குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கிராம தேவதையாக இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் (6.12.2022) காலை அப் பகுதியை சேர்ந்த சிலர் கோயில் அருகே சென்ற போது, கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு திறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. தகவல் அறிந்த கிராம மக்கள் கோயிலுக்குள் சென்று பார்த்தப்போது, அம்மன் கழுத்திலிருந்த தாலி, பீரோ கதவு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றி ருப்பது தெரிந்தது.
மேலும், அருகே திருப்பணிகள் நடைபெற்று வரும் பெருமாள் கோயிலிலும் பல நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திருப் பணிகள் காரணமாக கோயிலில் இருந்த பழை மையான சிலைகள் ஏற்கெனவே வேறு இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவை தப்பின. இதுதொடர்பாக, கிராம மக்கள் மற்றும் அற நிலையத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருக்கழுகுன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கரை காவிமயமாக்குவதா?
தொல்.திருமாவளவன் கண்டனம்
சென்னை,டிச.8- அண்ணல் அம்பேத்கரின்
66ஆவது நினைவு நாளான நேற்றுமுன்தினம் (6.12.2022) இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரை அவமதித்து காவிமயமாக்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமா வளவன் தம்முடைய சமூக வலைத்தளப்பதிவில் சுவரொட்டி படத்தை பதிவேற்றி, கடுங்கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை- பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை- தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் ஹிந்து மதத்திலிருந்து வெளி யேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற புரட்சியாளர் அம்பேத் கருக்கு பட்டை - குங்குமமிட்டு, காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் இப்பொழுது உக்ரைன் வர வேண்டாம் உக்ரைன் அதிபர் அறிவிப்பு
புதுடில்லி,டிச.8- அய்ரோப்பிய யூனியனில் இணைய விருப்பம் தெரிவித்த உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்ற சுமார் 18 ஆயிரம் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, ஒன்றிய அரசு அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 9 மாதங் களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியாவின் தனியார் செய்தி தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷ்யாவுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றதும் இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர மீண்டும் உக்ரைனுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மக்களுக்கு அதிகரிக்கும் கடன்சுமை
புதுடில்லி,டிச.8- நாட்டில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.35 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 5.9 சதவீதத்திலிருந்து 6.25 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் மேலும் இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும்
அறிவித்துள்ளார். நாட்டில் பணவீக்க விகிதம் அதிக ரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக தவணை கடன் வாங்கிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் மேலும் இதன் மூலம் வீட்டுக் கடன், தனி நபர் கடன், வாகனங்கள் கடன் ஆகியவைகளின் வட்டி விகிதம் உயரும். அதேநேரத்தில் வைப்புத் தொகை (பிக்சட் டெபாசிட்) உள்ளிட்ட முதலீட்டுக்கு வட்டி விகிதம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment