சென்னை, டிச. 22, டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில், குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பும் இடம்பெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுத் துறை களின் கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதியான வர்களை தேர்வு மூலம் தேர்ந்தெ டுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ் வொரு ஆண்டும் அதற் கான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வர்கள் தயாராகும் வகையில் தயாரித்து வெளியிடுவது வழக்கம். அதன்படி, கடந்த வாரத்தில் அடுத்த ஆண்டுக்கான (2023) டி.என்.பி.எஸ்.சி. ஆண்டுத் திட்ட அட்டவ ணையை வெளியிட்டது. அதில் குரூப்-4 உள்பட சில பதவிகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. அதிலும் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு மட்டும் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்றும், தேர்வை பொறுத்தவரையில் 2024ஆ-ம் ஆண்டு தான் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குரூப்-1 அறிவிப்பும் இடம்பெற்றது மேலும், குரூப்-1, குரூப்-2, 2ஏ போன்ற எதிர்பார்ப்பு மிக்க உயர் பதவிகளுக் கான அறிவிப்புகள் எது வும் இடம்பெறாதது தேர்வர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இது தொடர்பாக தேர்வர்கள் உள்பட பல்வேறு தரப் பில் இருந்து கருத்துகள் வந்தன. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தன்னுடைய ஆண்டுத் திட்ட அட்டவணையில் குரூப்-1 பதவிக்கான அறிவிப்பை இடம்பெற செய்து, புதிய அட்டவ ணையை நேற்று (21.12.2022) வெளியிட்டி ருக்கிறது. அதில், குரூப்-1 பதவிக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப் புகள் வெளியிடப்படும் என்றும், நவம் பர் 23-ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கான தேர்வு முடிவு 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.
Thursday, December 22, 2022
குரூப்-1 பதவிகள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment