இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்தே வருகிறது, டிசம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தினமும் சராசரியாக 158 பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சீனா, தென் கொரியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு எதிரொலியாக, மரபணு வரிசைமுறைக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் அனுப்புமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டிசம்பர் 19 உடன் முடிவடைந்த வாரத்தில் உலகம் முழுவதும் தினசரி சராசரியாக 5.9 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பாதிப்புகளில் இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிக்கவில்லை, அந்த நேரத்தில் சிங்கப்பூரில் தொற்று எழுச்சி அதிகரிக்க வழிவகுத்த மாறுபாடு புதிய XBB வகை வரஸ் தொற்றுஅதிகரித்தது.
தற்போது கோவிட்-19க்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன?
மார்ச் 23 அன்று, கோவிட்-19-அய்க் கட்டுப்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மார்ச் 31க்குப் பிறகு “பொருத்தமாக” நிறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. ஏப்ரல் 1 முதல் முழு இயல்பு நிலைக்கு திரும்புவதை இந்த உத்தரவு உறுதிப்படுத்தியது. முகக் கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியைப் பேணுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகள் தொடர்கின்றன, ஆனால் அவை சட்டத்தால் செயல்படுத்தப்படாது. நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, ‘சோதனை- தடுப்பு- சிகிச்சை- தடுப்பூசி-கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல்’ என்ற அய்ந்து உத்தியைப் பின்பற்றுமாறு அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகஸ்டில் பாதிப்புகளில் சிறிய அதிகரிப்புக்குப் பிறகு, ஒன்றிய சுகாதாரச் செயலர் மாநிலங்களுக்கு, மிகவும் துல்லியமான ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகள் மூலம் போதுமான சோதனைகளை செய்யவும், மற்றும் மரபணு வரிசைப்படுத்துதலுக்காக பன்னாட்டு பயணிகள், சென்டினல் தளங்கள் மற்றும் கிளஸ்டர்களிடமிருந்து மாதிரிகளை அனுப்பவும் அறிவுறுத்தினார். அக்டோபர் மாதம் தனது ஆய்வுக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) அளவைப் பெற வேண்டும் என்றும், அதிகாரிகள் பன்னாட்டு நுழைவுப் பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜூன் மாதம், திருவிழாக்கள் மற்றும் மத யாத்திரைகளில் பங்கேற்பவர்கள் அறிகுறியற்றவர்களாகவும் தடுப்பூசிகள் போடப்பட்டவர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும், இந்த நிகழ்வுகளில் போதுமான பரிசோதனை வசதிகளை வைத்திருக்கவும் அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது.
கோவிட் -19 இன் மற்றொரு அலை வருமா?
ஆகஸ்ட்-அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல்-மே 2021 போன்ற கொடிய அலைகள் இப்போது சாத்தியமில்லை என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர். BA.1 மற்றும் BA.2 துணை வகைகளால் செயல்பட்ட ஜனவரி 2022 இன் ஓமிக்ரான் அலையில் இருந்து தடுப்பூசிகளைப் போட்டுகொண்ட மக்கள் பெரும்பாலும் ஓமிக்ரான் வகைகளுக்கு எதிராக நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். சீனாவில் எழுச்சியை உண்டாக்குவதாகக் கருதப்படும் BF.7 மாறுபாடு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது, ஆனால், அது பரவவில்லை. “சமீபத்திய மாறுபாடு மற்ற நாடுகளுக்கான கண்காணிப்பு பட்டியலில் இருந்த பிற வகைகளைப் போலவே இருக்கும், ஆனால் இந்தியாவில் பாதிப்புகள் சிறிய அளவில் அதிகரித்துள்ளன” என்று ஒரு அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment