சென்னை,டிச.17- மாண்டஸ் புயலின் காரண மாக டிசம்பர் 9, 10ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாண்டஸ் புயல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ஆம் தேதியும் நடைபெறும் என ஏற்கெனவே அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19இல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment