புதுடில்லி,டிச.17- உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த இக்ராம் என்பவர் மின்சாரத் திருட்டு வழக்கில் கடந்த 2019-இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனித்தனியே விசாரணை நடை பெற்றது. அனைத்து வழக்கிலும் கடந்த 2020-இல் ஒரே நாளில் தண்டனை விதிக்கப்பட்டது. ஒவ் வொரு வழக்கிலும் தலா 2 ஆண் டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டது.
இதற்கு எதிராக இக்ராம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார். இதை உயர் நீதிமன்றம் ஏற்க வில்லை. இதையடுத்து இக்ராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இக்ராமுக்கு விதிக்கப் பட்ட 18 ஆண்டு சிறை தண்ட னையை 2 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைச் செய்யா விட்டால் குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்று தெரிவித்த நீதிமன்றம், குற்றவாளி தவறாக தண்டிக்கப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கவனித்திருக்க வேண் டும் என கண்டனம் தெரிவித்தது. இக்ராம் ஏற்கெ னவே 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால் விடுதலையாக உள்ளார்.
விசாரணையின் போது மனு தாரரின் கோரிக்கைக்கு உ.பி. அரசு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி, “மின்சார திருட்டை கொலைக் குற்றத்துக்கு சமமாக கருதக் கூடாது. இத்தகைய மனு தாரர்களின் அழுகுரலை கேட் கவே உச்ச நீதிமன்றம் உள்ளது” என்றார்.
No comments:
Post a Comment