முப்பெரும் விழா அழைப்பிதழ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதனிடம் வழங்கப்பட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறும், தங்கள் தொகுதிக்கு 10 வாழ்நாள் சந்தா விடுதலை நாளிதழுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவரும் வழங்குவதாக உறுதி அளித்தார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் கவிதா-கழக மாவட்ட அமைப்பாளர் வி.ஜி.இளங்கோ இணையரிடம் விழாக் குழுவினர் சார்பில் முப்பெரும்விழா அழைப்பிதழ் வழங்கினர்.ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் பத்து திரட்டித் தர இசைவு தந்தார்கள்.
திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் அ.அண்ணாதுரை அவர்களிடம் முப்பெரும்விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. விழாக் குழுவினரை அன்போடு வரவேற்று விழா சிறப்பாக நடத்துவோம் என பெருமையுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment