திருப்பத்தூர், டிச. 13- திருப்பத்தூர் ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணி பாராட்டு-விடுதலை சந்தாக்கள் அளிப்பு ஆகிய முப்பெரும் விழா வரலாற்றுப் பெருவிழாவாக திருப்பத்தூரில் 17.12.2022 அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங் களிலிருந்து மட்டுமல்லாமல், கருநாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் பன்னாட்டளவில் பல்வேறு நாடு களிலிருந்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை சுயமரி யாதை நாளாக பெருமகிழ்வுடன் கொண்டாடி வரு கின்றனர்.
கழகப் பிரச்சார நிகழ்ச்சிகள், விடுதலை நாளிதழுக்கு சந்தா திரட்டல் உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளை கழகப்பொறுப்பாளர்கள் தொடர்பணியாக்கிக்கொண்டு செவ்வனே செயல்பட்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்களுடன் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகள், களப்பணிகளை தீவிரமாக செய்து வரு கிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்களை சந்தித்து விழா அழைப்பிதழ் அளித்து விடுதலை சந்தாக்கள் வழங்கப் படுவதை உறுதி செய்து வருகிறன்றனர்.
No comments:
Post a Comment