புதுக்கோட்டை, டிச. 5- தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்,புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட் டத் தலைவர் ம.வீரமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மேலாளர் ஆர்.நெப்போலியன் முன்னிலை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான நோக்கம் குறித்து இரா.இராம திலகம் பேசினார். ஆய்வுகள் குறித்த கருத்துரையை எம்.எஸ். ஆர்.எப். முதுநிலை விஞ்ஞானி இரா.இராஜ்குமார் வழங்கினார். மாநில மாநாட்டிற்கு தேர்வான இளம் விஞ்ஞானிகளுக்கு கேட யம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்டக் கல்வி அலு வலர் சி. சுவாமி முத்தழகன் பேசினார்.
அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிர பாகரன், பொதுக்குழு உறுப் பினர் அ.மணவாளன், மாவட் டத் துணைத் தலைவர் க.சதா சிவம், நேரு இளையோர் திட்ட அலுவலர் ஆர்.நமச்சிவாயம், பொருளாளர் த.விமலா, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.பிச்சைமுத்து, மஸ்தான், சிவானந்தம் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். கந்தர்வக் கோட்டை அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, ஆவுடையார் கோயில் வட்டா ரத் தலைவர் சுரேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் 160 ஆய் வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த னர்.
இதிலிருந்து சிறந்த 16 ஆய் வுக்கட்டுரைகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட் டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
அரசு மேல்நிலைப்பள்ளி கிள்ளுக்கோட்டை, அரசு மேல் நிலைப்பள்ளி ஏம்பல், சிறீபிரக தாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி புதுக்கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மீனம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆவுடையார் கோவில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டுநாவல், அரசு மேல்நிலைப் பள்ளி அண் டக்குளம், அரசு உயர்நிலைப் பள்ளி மேலூர், ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி ஆவணத் தான்கோட்டை மேற்கு. அரசு உயர்நிலைப் பள்ளி மிரட்டு நிலை, அரசு உயர்நிலைப் பள்ளி நற்பவளசெங்கமாரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல் மங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப் பட்டி, நகராட்சி நடுநிலைப் பள்ளி சந்தைப்பேட்டை, புதுக் கோட்டை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அண்ணா மலையான் குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வேதியன்குடி ஆகிய பள் ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சி.சோபா நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment