சென்னை, டிச.3 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது:- தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆண்கள், 9 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 2 பேர் உள்பட மொத்தம் 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அரியலூர், தருமபுரி, ஈரோடு உள் ளிட்ட 25 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றிலிருந்து 35 பேர் குண மடைந்து உள்ளனர். கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 178 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த நிலை மாறி தற்போது மூன்று இலக்க எண்களில் மட்டுமே கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 275- ஆக குறைந் துள்ளது. நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண் ணிக்கை 4.46 கோடியாக உயர்ந் துள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 624- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள வர்கள் எண்ணிக்கை 4,672- ஆக குறைந்துள்ளது. நாட்டில் இது வரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண் ணிக்கை 219.93 -கோடியாக உள்ளது.
No comments:
Post a Comment