15 மாவட்டங்களில் குரூப் - 3ஏ தேர்வு மய்யங்கள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

15 மாவட்டங்களில் குரூப் - 3ஏ தேர்வு மய்யங்கள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை,டிச.6- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3(குரூப்-3ஏ) பணிக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜன.28-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மய்யங்களை தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் தேர்வு மய்யங்களிலும் தேர்வானது நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் தற்போது 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கடலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ஊட்டி, திருச்சி, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மய்யங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment