எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 133ஆவது திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், அமைச்சர்கள் பொன்முடி, முத்துசாமி, மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன், நிர்வாக இயக்குநர் குமார் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர்விஜிபி ராஜாதாஸ் ஆகியோர் உள்ளனர். கன்னியாகுமரியில் 133 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அவரின் அருமை மகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 133ஆவது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment