புதுடில்லி, டிச.22 இந்தியாவில் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று (21.12.2022) 210 பேர் நலம் பெற் றுள்ளனர். இதுவரை குணமடைந் தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 242 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 82 குறைந்துள்ளது. அதாவது தற்போது 3,408 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று மேற்குவங்கத்தில் மட்டும் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட உயிரிழப் புகளில் 2-அய் கணக்கில் சேர்த்துள் ளனர். மொத்த உயிரிழப்பு எண் ணிக்கை 5,30,680 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3 ஆண்கள், 3 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2 பேர் உள்பட மொத்தம் 4 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. திருச்சி, தேனி, தென்காசி உள்ளிட்ட 34 மாவட் டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயி ரிழப்பு ஏற்படவில்லை.
No comments:
Post a Comment