செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னை, டிச. 9- வடகிழக்குப் பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று 100 கன அடி உபரிநீர் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. 

கரையோர மக்கள் பாதுகாப்பா கவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ள னர். தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

மாண்டாஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அதி காலை முதலே கனமழை மற்றும் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன் றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சி புரம் மாவட்டம் குன்றத்தூர் வட் டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடி யாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி ஏரிகள் அதன் முழு கொள்ளளவை தாண்டி வருகிறது இதனால் ஏரி களில் தண்ணீர் அதிகரித்து வருகி றது. இதனால் 100 கன அடிநீர் முதற்கட்டமாக வெளியேற்றப்படு கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை நின்றதால் மூடப்பட்டி ருந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் மீண்டும் உபரி நீர் திறக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர். இதனால், உபரிநீர் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம் பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment