2020-2022
சென்னையில் கடந்த ஆண்டுகளில் வந்த புயல்களையும் இந்த மாண்டோஸ் புயலையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!
ஒவ்வொரு புயல் வந்து போனதும் எங்க ஏரியாவில் தண்ணீர் நிறைந்துவிடும். கைவண்டியிலும், டெம்போவிலும் சாப்பாடு கொண்டு வருவாங்க, ரொம்ப சங்கடமா இருக்கும். பால் தட்டுப்பாடு, எப்போதும் சரியான விலையில் கிடைக்கும் பால் மழைக்காலம் வந்தால் மட்டும் அதிக விலை ஏற்றி விற்பார்கள்
கரண்டு போனா எப்போது வரும் என்று தெரியாது, போன் பேசினாலே சார்ஜ் போய்விடும் என்று திட்டும் அப்பா அம்மா, கரண்டு இல்லை என்று கடைக்கு ஓடிச்சென்று மெழுகுவத்தி வாங்க நின்றால் - இல்லை என்ற தட்டுப்பாடு.
போன் இருந்தால் சிக்னல் இருக்காது - மழைக்காலம் என்றாலே தண்ணீர் தேங்கிய குடியிருப்பில் உள்ளவர்கள் சில நாட்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் சென்று தங்கவேண்டிய நிலை.
ஆனால் இம்முறை இது எதுவுமே இல்லை.
மலேரியா, டெங்குன்னு மருத்துவ மனையை நோக்கி கூட்டம் கூட்டமா யாரும் போகல.
வீட்லயே முடங்கிக் கிடக்காம எல்லாரும் வேலைக்கு போக முடிஞ்சது.
கணுக்கால் தண்ணியில போட் விடக்கூட முடியல.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மிகச் சிறப்பான பணிகளுக்கு இதுவே சாட்சி. அமைச்சர்களும் களத்தில் இருந்து பணிகளை வேகப்படுத்தினர்.
முதலமைச்சருக்கு பக்கபலமாக இரவு பகல் பாராமல் உழைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், உயிரையும் துச்சமெனக் கருதி களத்தில் இறங்கிய தூய்மைப் பணியாளர்களுக்கும், இவர்களை ஒருங்கிணைத்து இரவு பகல் பாராமல் களத்தில் இறங்கி அடாத மழையிலும் உடன் நின்று பணிகளை தூரிதப்படுத்திய சென்னை மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன் தீப்சிங் பேடி, நேரடியாக கள ஆய்வு நடத்திய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைவருக்கும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பாராட்டுமழை பொழிந்து வருகின்றனர்.
- அன்பு தமிழச்சி, பெற்றோர்: திராவிடன்-ரூபபாரதி 11-ஆம் வகுப்பு, அசோக் நகர், சென்னை.
No comments:
Post a Comment